இதைப் படிச்சிட்டிங்களா?

12/recent/ticker-posts

About

 


ஆசிரியர். வே. பழனிவேல்


   அனைவருக்கும் எனது அன்பான வணக்கம். எனது ஊர் மதுரை மாவட்டத்தில் உள்ள பழங்காநத்தம்.

  1987-ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் நாள் திருமதி. பழனியம்மாள் - திரு. வேலுச்சாமி ஆகிய தாய்-தந்தையருக்கு மகனாகப் பிறந்தேன்.

  ( 1992 - 2002) மதுரை, பழங்காநத்தத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 1-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படித்தேன். 

  ( 2002 - 2004 ) மதுரை, ஆரப்பாளையம் கிராஸ்ரோடு, அண்ணாத்தோப்பில் உள்ள மங்கையர்க்கரசி மேல்நிலைப்பள்ளியில் 11-ஆம் மற்றும் 12-ஆம் வகுப்பு படித்தேன்.

    ( 2004 - 2006 ) மதுரை, தே. கல்லுப்பட்டியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் ஆசிரியர் பட்டயப் படிப்பினை (D.T.Ed.) முடித்தேன்.

     2006-ஆம் ஆண்டு நவம்பர் 29-ஆம் நாள் மதுரை, மணிநகரத்தில் உள்ள மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். 

   ( 2006 - 2010 ) அதே நேரத்தில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலமாக இளநிலை கணிதவியலில் சேர்ந்து இளங்கலைப் பட்டமும் (B.Sc.) பெற்றேன்.

     2009-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29-ஆம் நாள் மங்கையர்க்கரசி நடுநிலைப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக (Secondary Grade Teacher) நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டேன்.

     ( 2012 - 2014 ) பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி மூலமாக இளநிலை கல்வியலில் சேர்ந்து இளங்கலைப் பட்டமும் (B.Ed.) பெற்றேன்.

   2017-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் தமிழ்நாடு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (TNSCERT) மூலம் நடைபெற்ற தொடக்கக்கல்விக்கான புதிய பாடத்திட்டத்த வரைவுக்குழுவில் இடம்பெற்றேன்.

 2018-ஆம் ஆண்டு புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சென்னையில் தமிழ்நாடு மாநிலக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (TNSCERT) மூலம் நடைபெற்ற தொடக்கக்கல்விக்கான பாடநூல் தயாரிப்பில் இரண்டாம் வகுப்பு கணக்குப் புத்தக வடிவமைப்புக் குழுவில் நூலாசிரியராகப் பணியாற்றினேன்.

 சென்னையில் கிடைத்த நண்பர்கள் மூலமாக கல்வியில் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் (ICT in Education) ஆர்வம் கொண்டு தொடர்ந்து கற்றல்-கற்பித்தலுக்குத் தேவையான தொழில்நுட்பங்கக் கற்று மாணவர்களுக்குப் பயன்படுத்திவருகிறேன்.

   2020-ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கிய கொரோனா பேரிடர் காலத்தில் (Corona Lockdown period) கல்வித்தொழில்நுட்பங்களை இன்னும் கூடுதலாக ஆன்லைன் வழியாகக் கற்றுக் கொண்டேன். கற்றவற்றை எங்கள் பள்ளியில் பணியாற்றும் அனைத்து ஆசிரிய நண்பர்களுடனும் ஆன்லைன் வழியாகப் பகிர்ந்து கொண்டேன். இப்பேரிடர் காலத்தில் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளை  வாட்ஸ்ஆப் வழியாக எங்கள் பள்ளியின் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும்   சென்றுசேர அந்தப் பகிர்தல் மிகவும் உதவிகரமாக இருந்தது.

   இப்பேரிடர் காலத்தில் சிறப்பாக கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளைத் திறம்படச் செய்ததற்காக Edunext Technologies என்ற அமைப்பு இந்திய அளவில் நடத்திய IT GURU AWARDS 2020-ல் Exemplary Contribution Award எனக்கு வழங்கி கௌரவித்தது.