கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மாணவர்களுக்கான பாடச்சுமையைக் குறைக்கும் நோக்கில் தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (TNSCERT) 05-06-2020 முதல் 22-06-2020 வரை ஆன்லைனில் நடத்திய பாடநூல் திறன் கட்டமைப்பு மேம்படுத்தல் மற்றும் பாடப்பொருள் பகுப்பாய்வு பணிமனையில் தொடக்கநிலை மாணவர்களுக்கான கணக்குப் பாட வல்லுநராகப் பங்கேற்று ஆன்லைன் மூலம் எனது பங்களிப்பினைச் செய்தேன்.
பள்ளிக்கல்வியின் தர மேம்பாட்டிற்கு ஆசிரியராக முன்மாதிரியான பங்களிப்புச் செய்தமையை மிகவும் பாராட்டி பள்ளிக்கல்வித்துறை ஆணையர், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் அவர்களால் இச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
என்னுடைய பங்களிப்பைப் பாராட்டி வழங்கப்பட்ட இச்சான்றிதழை ஆசிரிய நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.
2 Comments
Excellent palani
ReplyDeleteThankyou tr 🙏🙏
Delete